NEWS

Wednesday, August 8, 2012

சொராஸ்டர்(பார்சீ) மதம் ஓர் பார்வை


!!! நாம இறந்தா என்ன பண்ணுவாங்க,இந்துவா இருந்தா எரிப்பாங்க,கிறிஸ்த்துவனாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருந்தால் புதைப்பார்கள்,நாய் சாப்பிடவோ அல்லது பிணந்தின்னி கழுகுக்கோ போடுவாங்களா,கொஞ்சம் டெரரா இருக்கா ஜோரோஸ்ட்ரியன் எனப்படுகின்ற பார்சி சமூகத்தைப் பற்றி நமக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை,2020-ல் இவர்களது எண்ணிக்கை 23000 ஆக ஆகிவிடும் என இந்திய அரசாங்கம் அற
ிவித்துள்ளது .இவர்களது இறுதி சடங்கு முறை தான் கொஞ்சம் டெரர்,இறந்த பிறகு அந்த உடலில் இருந்து தலை முடி,நெகங்கள் இவைகளை நீக்கி விட்டு,அந்த உடலை பாலில் குளுப்பாட்டி,இவர்கள் டவர் ஆப்ஃ சைலன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஒரு குன்று போன்ற இடத்தில் வைத்துவிடுவார்கள்,அங்கே தயாராக இருக்கும் பிணந்திண்ணி கழுகுகள் கன நேரத்தில் உடலை தின்றுவிடுகின்றன,இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் நீர்,நெருப்பு,பூமி இவைகள் புனிதமான மூலங்களாக கருதப்படுவதால் மரணத்தின் மூலமாக அவைகள் கலங்கமுறக்கூடாது

மும்பை CST அருகில் உள்ள டவர் ஆப்ஃ சைலன்ஸ்,மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டு,முதல் அடுக்கில் ஆண்களும்,அதற்கு அடுத்த அடுக்கில் பெண்களும்,நடுவில் உள்ள அடுக்கில் சிறு குழந்தைகளையும் வைப்பார்கள்,கழுகுகள் தின்றது போக மீத உள்ளவைகள் மழை காரணமாக சுத்தம் செய்யப்பட்டு,இறுதியாக கடலில் கலக்கப்படுகின்றது, இங்கு நமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது,பார்சியில் இருந்து வேறு மதத்தில் திருமணம் ஆனவர்களுக்கும் இங்கு அனுமதி கிடையாது,

ஊருக்கு ஒதுக்கு புறமாகவே இவைகள் உருவாக்கப்பட்டு இருக்கும்,ஆனால் நகரங்கள் பெருகிக்கொண்டே வருகின்றகாரணத்தால்,காலப்போக்கில் இவைகள் மனிதர்கள் வசிக்கின்ற இடங்களுக்கு அருகிலே வந்துவிட்டன சமிபத்தில் இறந்த எஸ்.பி.கோத்ரெஜின் உடலைக்கூட இப்படி தான் டவர் ஆப்ஃ சைலன்ஸ்ல் வைத்துள்ளார்கள்,நம்ம ரத்தன் டாட்டா கூட பார்சி இனத்தை சேர்ந்தவரே இதனை நான் ஆதாரம் இல்லாமல் சொல்லுவதாக நினைக்க வேண்டாம் (02-02-2011) இந்தியா டுடே வாங்கி படித்து பாருங்கள்,

சரி நாம் இப்ப அவர்களுடைய வரலாற்றை பார்ப்போம் !!

உலகம் தோன்றிய காலத்திலிருந்து எத்தனையோ மதங்கள் பிறந்து வளர்ந்து மறைந்து இருக்கின்றன. அவைகளில் சில கருவிலேயே சிதைந்தும் இருக்கின்றன. சில மதங்கள் பிறந்து எழுந்து நடந்து ஓடி வல்லரசாக நிமிர்ந்து நின்று, பிறகு மறுபடியும் வீழ்ச்சியை நோக்கி வீழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் நாம் பார்க்கப்போகின்ற சொராஸ்டிரா மதமும் ஒன்று.

சொராஸ்டிரியம்(Zoroastriansim) எனப்படும் மதத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி. பண்டைய ஈரானிய மொழியில் சொராஸ்டர் (Zoroaster) என்ற இயர்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு .எனினும் இன்றைய வடக்கு ஈரானில் கி.மு.628ஆம் ஆண்டில்(கி.மு.628-கி.மு.551) இவர் பிறந்தாகத் தெரிகிறது .இவருடைய இளமைக் கால வாழ்வு பற்றியும் செய்திகள் இல்லை. வயது வந்ததும் இவர் தாம் உருவாக்கிய புதிய மதத்தை போதிக்க தொடங்கினார்.

சொராஸ்டர் (Zoroaster)

இவர்களின் போதனைப்படி, ஒருவனே தேவன். அவனை அவர் ‘அஹுரா மாஜ்டா’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘ஒர்மஜ்டு’) என்று அழைக்கின்றனார். ‘மெய்யறிவுப் பெருமான்’ (The wise Lord) என்று இதற்கு பொருள். அவன் நேர்மையினையும், வாய்மையினையும் ஊக்குவிக்கிறான். ஒரு தீயசக்தி இருப்பதாகவும் சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் ‘அங்ரா மைன்யூ’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘அஹ்ரிமான்) என அழைக்கின்றார்கள்.இந்த சக்தி தீமையினையும் பொய்மையினையும் குறிக்கிறது.

இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.

அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார்.

அதன் பின்பு இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது.


அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது.

ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள் எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

மும்பையில் சொராஸ்டரா பார்சீகள்

இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.


இவர்களில் பெரும்பாலும் மும்பாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசிக்கிறார்கள். பார்சிகள் ஓரளவுக்குச் செல்வச் செழிப்புமிக்க சமுதாயமாகத் திகழ்கின்றனர்.ஈரானிலும் சொராஸ்டிர சமயம் அடியோடு மறைந்து விடவில்லை.எனினும்,அங்கு இன்று சுமார் 40,000 சொராஸ்டர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்

Tuesday, August 7, 2012

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...மேரி கோம்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச் சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியான் மேரி கோம் அரை இறுதிக்குள் அபாரமாக புகுந்தார். இதன் மூலம் அவருக்கும், இந்தியாவுக்கும் ஒரு பதக்கம் உறுதியாகி விட்டது.
ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் குத்துச் சண்டை நடப்பு
ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான இந்தியாவின் மேரி கோம் பங்கேற்றுள்ளார். இந்தியாவின் சார்பில் இவர் ஒருவர்தான் கலந்து கொண்டுள்ளார்.
மகளிர் குத்துச் சண்டை தகுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் போலந்தின் கரோலினாவுடன் மேரிகோம் நேற்று மோதினார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே கரோலினாவுக்கு எதிராக மேரி கோம் அதிரடி கிளப்பினார். கரோலினாவும் சளைக்காமல் பதில் தாக்குதல் தொடுக்க முதல் சுற்றில் இருவரும் சமநிலை பெற்றிருந்தனர்.
2-வது சுற்றில் மேரி கோமை கரோலினா நிலைகுலையச் செய்த நிலையிலும் கூட மேரி கோம் அபாரமாக விளையாடினார். 2-வது சுற்றில் 5-4 கணக்கில் மேரிகோம் முன்னிலை பெற்றார். 3-வது சுற்றில் தமது அசராத ஆட்டத்தைக் கைவிடாத மேரிகோம் 7-3 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றினார். 4-வது சுற்று 4-4 என்ற கணக்கில் முடிந்தாலும் மொத்தம் 19-14 என்ற புள்ளி கணக்கில் கரோலினாவை வீழ்த்தினார் இந்தியாவின் மேரிகோம்.
கரோலினாவை வீழ்த்தியதன் மூலம் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் மேரிகோம். இதையடுத்து காலிறுதி ஆட்டத்தில் டுனீசியாவின் மரோவா ரஹாலியை
இன்று அவர் எதிர்கொண்டார்.
இப்போட்டியில் அபாரமாக விளையாடிய மேரி கோம், ரஹாலியை 15-6 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியைத் தட்டிச் சென்றார். அரை இறுதிக்குள்ளும் நுழைந்தார். இதன் மூலம் மேரி கோமுக்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டது. அரை இறுதியில் வென்றால் தங்கம் அல்லது வெள்ளியை எதிர்பார்க்கலாம். தோற்றால் வெண்கலம் கிடைக்கும். அரை இறுதியில் தோற்கும் இருவருக்குமே வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மேரி கோம், வெண்கலத்திற்கான வீராங்கனையே அல்ல, அவர் தங்கத்தை மட்டுமே குறி வைத்து போர்க்குதிரை போல பாய்ந்து கொண்டிருக்கிறார் என்பதால் மேரி கோம் நாட்டுக்கும், தனக்கும் பெருமை சேர்ப்பார் என்பது உறுதி.
பதக்கம் பெறும் 3வது வீராங்கனை
கர்ணம் மல்லேஸ்வரி, சாய்னா நேவால் ஆகியோர் இதுவரை ஒலிம்பிக்கில் பதக்கம் ஒன்றை வென்ற தனி நபர் வீராங்கனைகள் ஆவர். அதிலும் சாய்னா நடப்பு ஒலிம்பிக் போட்டியில்தான் வெண்கலம் வென்றுள்ளார். இந்த வரிசையில் தற்போது மேரி கோமும் இணைகிறார்.
மேரி தங்கம் வெல்ல அத்தனை இந்தியர்களும் ஒன்ருபட்டு பிரார்த்திப்போம்.

Sunday, August 5, 2012

தங்கம் தங்கம் ....ஒரு பொருளியல் பார்வை..



இந்த இந்தியாக்காரங்களுக்கும் மட்டும் ஏன்தான் தங்கம் மேல இவ்ளோ ஆர்வம்?

இதற்கான காரணத்தை ஆராய வரலாற்றின் பக்கங்களை ‘லைட்டாக’ புரட்டிப்பார்க்க வேண்டும். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் பல நூறு குட்டிகுட்டி ராஜ்ஜியங்கள் தேன்கூடுகள் போல ஆங்காங்கே இருந்தன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பணம். வித்தியாசமான பொருளாதார கோட்பாடுகள். யாரும் யார் மீதும் படையெடுக்கலாம்.

உதாரணத்திற்கு உடன்குடி  மன்னருக்கு அந்தப்புரத்தில் சரசமாடி , சோமபானம் அருந்தி வாந்தியெடுத்து போரடிக்கிறது. உடனே சாத்தான்குளம்  அரசர் மீது போர் தொடுக்கிறான்.  சாத்தான்குள மகாராஜாவின் படைகளை துவம்சம் பண்ணி வெற்றியும் காண்கிறான். அடுத்து என்ன? ஊருக்குள் புகுந்து அந்த நாட்டின் கஜானா முதல் ஊரிலிருக்கும் தட்டுமுட்டு சாமான்கள் வரை சகல செல்வங்களும் கொள்ளையடிக்கப்படும். அந்த சூழலில் ராஜாக்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் அப்பாவி மிஸ்டர்.பொதுஜன கோவிஞ்சாமி , தன்னுடைய செல்வங்களை பாதுகாக்க , முடிந்த வரைக்கும் மதிப்பு மிக்க தங்கமாக வாங்கி வைத்துக்கொண்டு போர்க்காலங்களில் வீட்டுத்தோட்டத்திலோ தோப்புகளிலோ புதைத்து வைத்துவிடுவான். இப்படித்தான் தன்னுடைய எதிர்கால பாதுகாப்பிற்காக தங்கத்தை சேர்த்துவைத்துக் கொள்ளும் வழக்கம் நம்மூரில் மட்டுமல்ல உலகெங்கிலும் நம் ஒவ்வொருவருடைய ஜீன்களிலும் பரவியுள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். 2000 வருடங்களுக்கு முன்னால் எகிப்தில் தொடங்கி இன்றுவரை தங்கமோகம் மனிதனுக்குள் இருந்துள்ளது. இன்றும் நம்மூரில் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் குண்டுமணி தங்கத்தில் மூக்குத்தி சைஸிலாவது வாங்கி வைத்துக்கொள்வதை பார்த்திருப்போம். பணத்தட்டுப்பாடு வரும்போதெல்லாம் அதை விற்றோ அடமானத்திற்கோ கொடுத்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

இந்த தங்கத்தின் விலை திடீரென ஜெட் வேகத்தில் உயர்வதும் , திடீரென குறைவதும் ஏன்? தங்கத்தின் விலையை யார் தீர்மானிக்கின்றனர்?

முகூர்த்த நாட்கள், விழாக்காலங்கள், போனஸ் நேரம் இப்படி எப்போதெல்லாம் நம் கைகளில் காசு அதிகமாய் புரளுமோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கூடும்! அந்த நேரத்தில் அதிகம் பேர் தங்கம் வாங்குகின்றனர் அதனால் தங்கம் விலை உயர்கிறது! நம்ம எல்லாருமே இப்படித்தான் பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மைக்கதை வேறுவிதமாக இருக்கிறதே!


நம் பணப்புழகத்திற்கேற்றாற் போல தங்கத்தின் விலை உயர்ந்தது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. அப்போதெல்லாம் சில ஏஜன்ட்கள் வெளிநாட்டிலிருந்து மொத்தமாக தங்கம் வாங்கி அதை நாடுமுழுதும் இருக்கும் பல ஆயிரம் வியாபாரிகளுக்கு பிரித்து தருவதில் சிக்கல் இருந்தது. எப்போதெல்லாம் வியாபாரிகளுக்கான தேவை அதிகமாகியதோ அப்போதெல்லாம் விலையும் கூடியது.

ஆனால் இன்று ஒற்றை பட்டனை ‘டிக்’ எனத் தட்டினால் அடுத்த நாளே ‘டங்’ என்ற சத்தத்துடன் தங்க்க் கட்டிகள் விமானத்தில் தரையிறங்கிவிடும். இன்ஸ்டன்டாக தங்கத்தை சப்ளை செய்யத் தேவையான வசதிகள் வந்துவிட்டன. கணினியின் பயன்பாட்டால் தங்கத்தினை வாங்குவதும் விற்பதும் எளிதாகியுள்ளது. இது தங்கத்தின் விலை நிர்ணயத்தின் பாணியை மாற்றியுள்ளது. தங்கத்தின் விலை இந்தியர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போதெல்லாம் அதிகமாகிறது என்பதெல்லாம் சுத்த டுபாக்கூர். நம்மூர் மக்களுக்கு எப்போதுமே தங்கத்தின் மீதான மோகம் மிகமிக அதிகம். அது ஒரே நாளில் திடீரென ஊரில் இருக்கும் அத்தனை பேரும் ஜாய் ஆலுக்காஸ் வாசலில் தவம் கிடப்பதெல்லாம் கிடையாது. சென்னையிலிருக்கும் ஒரு பிரபல நகைக்கடையின் தினசரி விற்பனை சராசரியாக ஐம்பது லட்சமாம்!

தங்கத்தின் விலை ரங்கநாதன் தெருவிலோ ராஷ்டிரபதி பவனிலோ தீர்மானிக்கப்படுவதில்லை. எல்லாமே நியூயார்க்கில் . இதை ‘LONDON GOLD FIXING’ என்கின்றனர். ஏன் நியூயார்க்கில் நிர்ணயிக்கப்படும் விலைக்கு லண்டன் கோல்டு பிக்சிங்னு பேரு? ஓவராக யோசிக்க வேண்டாம் , இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை லண்டனில் தீர்மானிக்கப்பட்டு வந்த தங்கத்தின் விலை , அதன்பின் நியூயார்க்கிற்கு இடம் மாறியது , ஆனால் லண்டன் மட்டும் பெவிகால் போல காலாகாலத்திற்கும் ஒட்டிக்கொண்டது.

உலகின் முண்ணனியான ஐந்து தங்க வர்த்தகம் செய்கிற பெரும் நிறுவனங்கள்( இவர்களுக்கு புல்லியன்ஸ் என்று பெயர்) தினமும் ஒன்று கூடி பேசி தங்கத்திற்கான விலையை தீர்மானிக்கின்றனர். இந்த விலை டாலர்களில் மதிப்பிடப்படுகிறது. தற்சமயம் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்தின் விலை 1070 டாலர்களுக்கு விற்கிறது. எதை வைத்து இந்த விலையை உலக மார்க்கெட்டில் நிர்ணயிக்கின்றனர்? இவர்கள் யார் தங்கத்தின் விலையை முடிவு செய்ய?

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டினர் தங்க விற்பனைக்காக இரண்டு முக்கிய கால நிலைகளை வைத்துள்ளனர்..

1.SUMMER DOLRDUMS ( கோடைக்காலம் ) – மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை

2.WINTER EUPHORIA ( குளிர்காலம் ) – டிசம்பர் முதல் பிப்ரவரி பாதி வரைக்கும்

கோடைக்காலத்தில் தங்க வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பலர் தங்களுடைய தங்கத்தினை விற்றுவிட்டு விடுமுறையில் சென்று விடுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை மிக அதிக அளவில் குறையும். அதனால் டோல்ட்ரம்ஸ் குறைந்த லாபம் தரக்கூடியது.

குளிர்காலங்களில் தங்க வர்த்தகத்தில் அதிகம் பேர் ஈடுபடுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை அந்த காலங்களில் அதிக அளவில் அதிகரிக்கிறது. குறுகிய கால முதலீடாக தங்கத்தினை வர்த்தகம் செய்பவர்களுக்கு யுப்போரியா அதிக லாபத்தை ஈட்டித்தரும்.
உலகெங்கும் தங்கம் மற்றும் இன்னபிற உணவுப்பொருட்கள் மற்றும் உலோக வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களை SPECULATOR COMMUNITY என்கிறோம். இதில் 95% வர்த்தகம் இன்டர்நெட் வழியாகவே நடைபெறுகிறது. உங்களிடம் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அதேபோல் பத்துமடங்கு அதாவது ஒரு லட்சத்திற்கு தங்கம் வாங்க முடியும். உடனே உங்கள் கையில் கட்டித்தங்கத்தை வெட்டி எடுத்து தந்து விட மாட்டார்கள். எல்லாமே டாகுமென்ட்டாக இருக்கும். விலை உயரும்போது அதை விற்று லாபம் பார்க்கலாம். இது அதிக அளவிலான குட்டி குட்டி முதலீட்டாளர்களை இந்த வர்த்தகத்தின் பக்கம் இழுத்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக தங்கத்தின் விலை மடமடவென ஜெட்வேகத்தில் உயர்வதற்கான காரணமும் அதுதான். இந்த தங்க விலை ஏற்றம் குறையும் அல்லது இன்னும் அதிகரிக்குமா என்று அனைவருக்கும் பயம் கலந்த ஒரு கேள்வி நிச்சயம் இருக்கும்.
 1980 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு எவ்வளவு இருந்தது தெரியுமா? 850 டாலர்கள் , ஆனால் அடுத்து இரண்டே ஆண்டுகளில் அந்த விலை குறைந்து வெறும் 250 டாலர்களாக குறைந்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்தியா அதில் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு மிகமிக குறைவு. 15 அல்லது 16 ரூபாயாகத்தான் இருந்தது, ஆனால் பொருளாதார வளர்ச்சியில் அது 40முதல் 45ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது. அதே மாதிரியான ஒரு சூழல்தான் தற்சமயம் நிலவுகிறது, ஆனால் இந்தியாவின் பன்னாட்டுக் கொள்கைகளால் உருவான திடீர் பொருளாதார வளர்ச்சி அதிக பாதிப்பு இருப்பது போல தோற்றமளிக்கிது. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் தங்கம் விலை ஓரளவு அதாவது 20% வரை குறையும் என்றே பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.
உலக அளவில் இது மிகமிக ‘சாதாரணமான நிரந்தரமில்லாத’ விலையேற்றமாகவே கருதப்படுகிறது. குறுகிய கால முதலீடு செய்பவர்கள் வேண்டுமானால் இப்போது தங்கம் வாங்கி அடுத்து மூன்று மாதங்களில் விற்கலாம்! மற்றபடி தங்கத்தின் விலை ஏற்றம் என்பது ஒரு மாயையே , சிறிய அளவில் தங்கம் வாங்குபவர்களுக்கு இந்த விலையேற்றம் எந்தவித பாதிப்பையும் உண்டாக்காது. பெரிய முதலாளிகளுக்குத்தான் பாதிப்பெல்லாம்!இது ஒரு பக்கம் நடக்கட்டும்....ஆனா உண்மை என்னன்னா நம்மளை மாதிரி நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் என்பது அவசரத்திற்கு அடமானம் வைக்க மட்டுமே என்பது உண்மை..#அவதானிப்பு#..

சினிமாவும் சாராயமும்..(குடியும் குடியைசார்ந்த மக்களும்)


தமிழ்சினிமாவில் குடிப்பழக்கமும் குடிகாரர்களும் எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. எம்ஜிஆர் சிவாஜி காலம் தொடங்கி சிம்பு தனுஷ் வரைக்கும் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு புதிய கதைகளை நமக்கு சொல்லியிருக்கிறது.

ஆரம்பகால திரைப்படங்களில் குடிகாரன் எப்போதுமே வில்லன்தான். அவன் போதையில் கொலை,கற்பழிப்பு,கொள்ளை முதலான தவறுகளை செய்கிறவனாக இருப்பான். பணக்கார குடிகாரன் VAT 69 குடிப்பான்.. சேரி வில்லன் சாராயம் குடிப்பான். ஒழுக்கம் என்பதன் அளவுகோல் குடிதான். குடிப்பவன் வில்லன், குடிக்காதவன் நாயகன். (எம்ஜிஆர் படங்களை விட இதற்கு நல்ல உதாரணம் தேவையில்லை)

இது காலப்போக்கில் மாறி ஒரு கட்டத்தில் நாயகனும் குடிக்கத்தொடங்குகிறான். அவன் மகிழ்ச்சிக்காக குடிப்பதில்லை.. தோல்வியால் குடிக்கிறான். குடித்தாலும் வில்லன் செய்கிற மாபாதகங்களை செய்வதில்லை.

நாயகன் குடிப்பழக்கத்தினால் சீரழிவான். அதோடு போதையினால் வில்லன் செய்த கொலைகளுக்காக மாட்டிக்கொள்வான். அவனுடைய குடும்பம் அழிந்துபோகும்.. இதுபோல கதற கதற கதை சொல்லும் கண்ணீர் காவியங்கள் தமிழில் அதிகம். சிவாஜிகணேசன் நடித்த சொர்க்கம், ஜெய்ஷங்கரின் குழந்தையும் தெயவமும் மாதிரியான பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். காதலில் அல்லது வாழ்க்கையில் தோல்வியடையும் நாயகர்கள் குடித்து குடித்து குடல் வெந்து செத்துப்போவதாகவும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன (உதா – தேவதாஸ்,வசந்தமாளிகை,வாழ்வேமாயம்). அல்லது கிளைமாக்ஸில் குடிகார ஹீரோ திருந்தி உத்தமனாக குடிக்காதவனாக மாறிவிடுவான்.. சுபம்.

90களின் இறுதிவரைக்கும் கூட நிலைமை இப்படித்தான். குடிப்பழக்கம் என்பது வில்லன்களுக்கு பூஸ்டாகவும், நாயகர்களுக்கு தோல்விகால மருந்தாகவும் மட்டுமே இருந்திருக்கிறது.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். மதுர,சிவா மனசுல சக்தி,பருத்திவீரன்,பாபா தொடங்கி சகுனி வரைக்கும் டாஸ்மாக் பார்களில்தான் நாயகனின் பெரும்பாலான காட்சிகள் அரங்கேறுகின்றன. விவேக் தொடங்கி சந்தானம் வரைக்கும் குடியின்றி காமெடி செய்வதில்லை. நாயகன் குடித்துவிட்டு குத்தாட்டம் போடாத திரைப்படங்களே வெளியாவதில்லை. குடிப்பழக்கம் நாயக அந்தஸ்தை வழங்குகிற ஒரு விஷயமாகவும் மாறிவிட்டது. சிகரட் எப்படி ஆண்மையின் அடையாளமாக ஒரு காலத்தில் கருதப்பட்டதோ இன்று தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதே அந்தஸ்தை பெற்றுள்ளது. போதையிலிருப்பவனே பிஸ்தா!

இன்றைய திரைப்பட குடியர்களில் நல்லவன் கெட்டவன் என்கிற பாகுபாடு கிடையாது. வில்லனும் குடிப்பான், நாயகனும் குடிப்பான், காமெடியனும் குடிப்பான். டாஸ்மாக்கில் காதலை சொல்லி, அதிநவீன பாரில் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சினிமாவில் குடிப்பழக்கம் முன்னேறி வந்திருக்கிறது. ஏழை பணக்காரன் என்கிற வர்க்க பேதங்களற்ற மெய்யான சமரசம் உலவும் இடங்களாகவும் அவை மாறிவிட்டன. நம் திரைப்படங்களும் தொடர்ந்து குடியை ஒரு கொண்டாட்டமாக முன்னிறுத்துகின்றன. குடித்துவிட்டு போதையில் ஆடுவதை தொடர்ந்து காட்சிப்படுத்துகின்றன. ‘’மச்சி கைல கிளாஸ் எட்த்துக்கோ இன்னொரு கைல ஸ்நாக்ஸ் எட்த்துக்கோ’’ என்று நம் வீட்டு குழந்தைகள் பாடுவதை ரசிக்கிறோம். பெருமையோடு உச்சிகுளிர்கிறோம்!

கடந்த பத்தாண்டுகளில்தான் இத்தகைய மாற்றத்தை நம்மால் சினிமாவில் மட்டுமல்ல சமூகத்திலும் அவதானிக்க இயலும். இதற்கு பல அரசியல் காரணங்களும் சமூக பொருளாதார வியாக்யானங்களும் தரப்படுகின்றன. அரசுகூட பின்விளைவுகளை பற்றி கவலையின்றி மகிழ்ச்சியோடு உற்சாகமாக சாராயம் விற்கிறது. நாமும் டாஸ்மாக் லீவு விட்டாலும் கள்ளச்சந்தையில் அதிக விலைகொடுத்தாவது வாங்கி வாங்கி வயிறுமுட்ட குடிக்கவும் தொடங்கியுள்ளோம்.

****




தமிழில் சமகால அரசியலை கட்சி பாகுபாடின்றி விமர்சிக்கிற அல்லது அவற்றை பட்டவர்த்தனமாக பிரதிபலிக்கிற படங்கள் மிகமிக குறைவு. அப்படி எதுவும் வந்திருப்பதாகவும் தெரியவில்லை. (ஒன்றிரண்டு இருக்கலாம். நான் பார்த்ததில்லை) அவ்வகையில் மதுபானக்கடை திரைப்படம் மிக முக்கியமானதாக இருக்கிறது. இது தமிழில் இதுவரை காட்சிப்படுத்திய ஒட்டுமொத்த குடியர்களையும் அக்கலாச்சாரத்தையும் புரட்டிப்போடுகிறது. இப்படத்தில் குடியர்கள் வில்லனுமில்லை ஹீரோவுமில்லை..

ஆவணப்படம் போல நிச்சயம் இப்படம் ‘ரா’ வாக இல்லை. குடிகார சமூகத்தின் கொடுமைகளை தோலுரிக்கிறேன் பேர்வழி என ‘காட்’ ஆன அட்வைஸ் மழைகளும் கிடையாது. குடியால் குடும்பங்கள் பெண்கள் படும் வேதனை என மெகாசீரியல்களை போல கண்ணீரும் விடவில்லை. கம்பிமேல் நடப்பதை போன்றது இதுமாதிரி படமெடுப்பது. கொஞ்சம் தவறினாலும் படம் குடிப்பழக்கத்தை கொண்டாடுகிற படமாகவோ அல்லது குடிப்பழக்கம் கொடிய விஷம்.. என்னும் நியூஸ் ரீல் படமாகவும் ஆகிவிடும்! ஆனால் மிக சாமர்த்தியமாக மைல்டாக அதை கடந்துசென்றிருக்கிறார் படத்தின் இயக்குனர் கமலகண்ணன்.

டாஸ்மாக் கடையின் 24மணிநேரம்.. அவ்வளவுதான். ஒட்டுமொத்த படமும். டாஸ்மாக் பார் ஒன்றிலிருந்தே தொடங்கி அங்கேயே முடிகிறது. நம் காதுகளில் தினமும் வந்துவிழுகிற வாக்கியங்களே வசனங்கள்! நாம் அன்றாடம் சந்திக்கிற விதவிதமான குடிகாரர்களே பாத்திரங்கள். இவ்வளவுதான் மதுபானக்கடை திரைப்படம்!

நாள் முடிந்து, பொட்டியை கட்டும் ஒரு டாஸ்மாக் பாரின் இறுதி நிமிடங்களிலிருந்து படம் தொடங்குகிறது. கடைய மூடணும் வெளியே போங்க என பாரில் தண்ணி அடிப்பவர்களிடம் கெஞ்சுகிறார் பார் ஓனர்.. மறுக்கிறார்கள்... மிரட்டுகிறார்... மறுக்கிறார்கள்... ஒருகட்டத்தில் எங்களுக்கு குடிக்க உரிமையில்லையா.. என்று கேட்டு ஓவரான போதையிலேயே பாட்டு பாடி போராடி ஓய்ந்து போரடித்து கிளம்புகிறார்கள். மாபெரும் குப்பைத்தொட்டியை போல் காட்சியளிக்கும் டாஸ்மாக் பாரினை சுத்தப்படுத்துவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. (கதை என்று ஏதாவதிருந்தால் அது உங்கள் கற்பனையே என டைட்டில் கார்டு வேறு போடுகிறார்கள்! அது உண்மைதான்)

டாஸ்மாக் பார்கள் திறப்பதற்கு முன்பாகவே கைநடுக்கத்தோடு காத்திருக்கும் பிரபல குடிகாரர். வேலைக்கு போகும் முன் குடித்துவிட்டு செல்லும் கூலிக்காரர்கள்,துப்புரவு தொழிலாளர்கள். பிச்சை எடுத்தாவது குடிக்கும் படித்த இளைஞன். பாருக்கு வருகிறவர்களிடம் ஓசியில் வாங்கி குடிக்கும் பாட்டுக்காரன். தன் நிலத்தை விற்று அந்தகாசிலேயே குடித்து பைத்தியமாகி குப்பை பொறுக்கும் பைத்தியக்காரன். பார் நடத்தும் முதலாளி, பாரில் வேலை பார்க்கும் பையன்கள், டாஸ்மாக்கில் வேலைபார்க்கும் ஆள், மாமூல் வசூலிக்கும் போலீஸ்காரர், காதல் தோல்வியில் முதல் முறை குடிக்கும் இளைஞன், முதல் முறை பீர் குடிக்கும் பள்ளிசிறுவர்கள், அதே பள்ளியின் குடிகார ஆசிரியர், ராமர் அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுத்து குடிக்கும் இளைஞர்கள், பார் பையன்களிடம் வீரம் காட்டும் சாதிசங்கத்தின் முரட்டு ஆள், ஆலை தொழிலாளர்கள் என ஏகப்பட்ட கேரக்டர்கள் படம் நெடுக..

இவர்கள் அத்தனை பேருக்கும் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அவர்கள் மதுபானக்கடைக்கு வருவதற்கும் குடிப்பதற்கும் ஒரு காரணமிருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக போகாமால் மதுபானக்கடையின் உள்ளே மட்டுமே கதை நகர்கிறது. பாத்திரங்கள் வருகின்றன.. குடிக்கின்றன.. வெளியேறுகின்றன. இத்தனை பாத்திரங்களும் குடிப்பதற்கு முன்பும் பின்பும்.. இந்த இடைப்பட்ட காலத்தின் சுவாரஸ்ய மணித்துளிகள்தான் மதுபானக்கடை! சரியாக 24மணிநேரம் முடிந்ததும் படமும் முடிந்துவிடுகிறது.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாதியங்கள், உடல்மொழி, பேச்சு என பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர். படம் முடிந்த பிறகு இந்தாளு நிச்சயம் மொடாக்குடிகாரனாத்தான்யா இருக்கணும் என்கிற எண்ணம் தோன்றிது. ஆனால் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு குடிப்பழக்கமே கிடையாதாம்!

தமிழ்சினிமாவில் இதுமாதிரியான படங்களில் இது முதல் முயற்சி என்றே சொல்லலாம். நான்லீனியர் தன்மையோடு படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பறவைப்பார்வையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிக்கலாச்சாரத்தையும் , அதன் பின்னிருக்கும் அரசியலையும், ஒவ்வொரு குடிகாரனின் ஏக்கத்தினையும், அவனுடைய வேதனை, மகிழ்ச்சி, இன்ப துன்பங்களையும் சொல்லிவிடுகிற முயற்சியாக இப்படத்தினை அணுகலாம். இப்படத்தில் வருகிற பலரையும் நாம் தினமும் சந்தித்திருப்போம்.. அல்லது அது நாமாகவே கூட இருப்போம். அதுதான் இப்படத்தின் வெற்றி! இப்படம் எந்த பிரச்சனையையும் முன்வைக்கவில்லை. எந்த தீர்வையும் நமக்கு சுட்டிக்காட்டவில்லை. இன்றைய தமிழகத்தை உள்ளது உள்ளபடி குறுக்குவெட்டாக நமக்கு காட்டுகிறது! தட்ஸ் ஆல்!

ஒரு திரைப்படம் கோருகிற எந்த அடிப்படை சமாச்சாரங்களும் இப்படத்தில் கிடையாது. தான் செய்ய நினைத்த அனைத்தையும் முழுமையான சுதந்திரத்தோடு எந்த சமரசமும் இல்லாமல் செய்துபார்த்திருக்கிறார் இயக்குனர். படம் நெடுக செல்லும் ஒரு பதட்டம் கிளைமாக்ஸில் மாபெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்க வேண்டும். ஆனால் எதுவுமேயில்லாமல் எல்லா நாளினைப்போலவும் கிளைமாக்ஸும் பரபரப்பின்றி அமைதியாக முடிகிறது. அதுதான் இப்படத்திற்கு ஒருவித கல்ட் தன்மையை கொடுப்பதாக உணர்கிறேன்.

படத்தில் நடித்திருக்கும் அத்தனை புதுமுகங்களும் தங்களுக்கு தரப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருப்பதாகவே உணர்கிறேன். அதிலும் பெட்டிஷன் மணியாக வருகிற நடிகர்.. பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தின் நவரச நாயகன் அவர்தான். கவர்ந்தவர்களில் இன்னொரு ஆள் பாட்டு பாடி ஓசியில் குடிக்கும் வெள்ளைத்தலை தாத்தா.. படம் 7டி கேமராவில் படமாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அந்த உணர்வேயில்லை. கேமரா ஆங்கிள்களில் தொடங்கி, ஆர்ட் டைரக்சன், எடிட்டிங், இசை என எல்லாமே தரமாகவே இருக்கிறது. இத்திரைப்படம் ஒரு பாராட்டப்பட வேண்டிய அல்லது கொண்டாடப்பட வேண்டிய முயற்சி என்பதில் மாற்றுகருத்தில்லை.

ஆனால் எனக்கும் என்னோடு படம் பார்த்த இன்னும் சில நண்பர்களுக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்த இப்படம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. பெரும்பாலானோருக்கு பிடிக்காமல் போகவே வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக பெண்களால் இப்படத்தை எள் அளவும் ரசிக்க இயலாது. குழந்தைகளுக்கு இப்படத்தை காட்டவே கூடாது.

நம் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் நாம் எப்போதும் மதுவுக்கு எதிரானவர்களாக இருந்ததேயில்லை. மது தமிழர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்திருக்கிறது. மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை. இன்று அதையெல்லாம் செய்கிறது நம் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடைகள்.. மதுபானக்கடை திரைப்படம் பேசுகிற உணர்த்த விரும்புகிற விஷயமும் இதுதான்!