மற்றவர் படும் துயரம் பார்த்து கண்
முடி இந்த உலகத்தில் வாழும் மனித இனம்
சென்று இருக்குமேயானால் இந்த உலகம் எப்போதே அழிந்து போய் இருக்கும்.
ஆனால் பிறர் படும் துயரம்
பார்த்து, ஒரு சிலரை தவிர இந்த பூமியில் வாழும் 95 சதவிகித மக்கள் தன் துயரமாக
நினைக்கின்றார்கள்...
உடன்குடி சாலையில் துப்பாட்டா ரோட்டில் பிரள
இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண்ணை எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று விட்டு
விட முடிவதில்லை. துரத்தி போய் துப்பாட்டாவை ஒழுங்கா போட்டுக்கோ என்று
சொல்கின்றோம்... கார் கதவை சரியா
சாத்தலைன்னா என்ன உயரா போய் விடும்...?? கார் கண்ணாடி கதவை தட்டி டோர் ஒழுங்கா சாத்தலைன்னு சொல்லறோம்..
இவ்வளவு ஏன் பைக்ல சைடு ஸ்டேன்ட் எடுக்காம வண்டி ஓட்டறவனை ஓத்தா எங்கயாவது வளையற எடுத்துல உழுந்து வாரி
முஞ்சி மொகரை பேத்துக்கிடட்டும் என்று விட்டு விடுகின்றோமா? முக்கியமா ஹெல்மெட்
போட்டு புல்லா கவர் பண்ணி இருக்கறவன் கிட்ட இந்த சைடு ஸ்டாண்ட் விளக்கி
புரியவைக்கறதுக்குள்ள பொழுது விடிஞ்சிடும்...
சலுச்சிக்கிட்டாலும் சொல்லாமவா போறோம்...
இவ்வளவு ஏன் பைக்ல பகல்ல லைட் எறிஞ்சா நாம என்ன கரெண்ட் பில் கட்டப்போறமா? அல்லது லைட்டு போட்டு ஓட்டபோறவன் கட்டப்போறானா?
ஏதுவும் இல்லை... பட் லைட்டை நிறுத்துக்கன்னு புதிய பாதை பார்த்திபன் ஐஸ்வர்யா
கிட்ட கையால பிசைஞ்சி அழுத்தி சொல்லறது
போல சொல்லலை..??? ஏன் மனிதாபிமானம்தான்...
வண்டி ஓட்டறவனுக்கு நமக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை.. ஆனா நம்ம வீட்டு மூதேவி ஒன்னு இப்படி வண்டி ஓட்டிக்கிட்டு
போனா நம்மாள சும்மா இருக்க முடியுமா? காச்சி முச்சின்னு கத்தறமே... அது போலத்தான்...நம்ம புள்ளையா
இருந்தா அப்படியே விட்டு விடுவோமா?என்ற எண்ணம்தான் கொஞ்சம் பாலிஷா சக மனிதனை
நேசிக்க வைக்குது...
"லூசு என்ன டிரஸ் பண்ணிருக்க இன்னைக்கு...ஒழுங்காவே இல்ல உடம்புல பாதி தெரியுது பாரு.."
ஐயையோ...ச்சே..இன்னைக்கு அவசரமா கிளம்பினேன்...அண்ணன்
அவசரப்படுத்தினான் அவன் திருச்செந்தூர்
போவனும்ன்னு...அதான் கண்ணாடி முன்ன கூட நிக்காம ஓடி வந்துட்டேன்... அசிங்கமா
இருக்கா?
"சுடிதார் சீ துருவுல உன் மார்ல பாதி தெரியுது... டல் லைட்டுல தெரியலை ... ஹார்ஷ் லைட்டுல தெரியுது.."
என்ன லைட்டோ ? அசிங்கமா இருக்கா இல்லையா?
சூரிய வெளிச்த்துல நல்லா தெரியுதுன்னேன் .
சரி ஷால் வச்சி மறைஞ்சிக்கறேன்... பக்கி
மாதிரி பார்த்துக்கிட்டு இருக்காம சொல்லி
தொலைச்சியே? தேங்ஸ்...
ஏதோ பார்த்த ஒரு செகன்ட் பக்கியா இருக்கலாம், ஆனா 24 மணி நேரமும் பக்கியா
இருக்க முடியாது என்று நக்கல் விட்டேன்... என் தோழி ஆமோதித்து
புன்னகைத்தாள்... சபையில் தனக்கு தெரிந்த பெண் காட்சி பொருளாய் இருப்பதை எவர் மனமும்
விரும்புவதில்லை....
முந்தாநாள் கோவை வணிகவாளக தீயில நாலு பேர் செத்து போனாங்க..
அதுல ரெண்டு பொண்ணுங்க வயசு பொண்ணுங்க... அதுல ஒரு பொண்ணு பத்து நாளக்கு
முன்னாடிதான் வேலைக்கு சேர்ந்து இருக்கு...
பொதுவா மர்டர் நடந்தா என் பார்டர் உன்பார்டர்ன்னு பிரிச்சி பேசற போலிஸ்
தீயணைப்பு வீரர்களோடுகளம் இறங்கி போராடி இருக்காங்க.. போலிஸ்
பொதுமக்கள் பயர் சர்விஸ் பார்த்துக்கும்ன்னு கைய கட்டி வேடிக்கை
பார்க்கலை...? அதுதான் மனிதம்.
ஈழத்துல போர் சமயத்துல மக்கள் படற அவஸ்தைய பார்த்த போது மனசு துடிச்சி போவுதே?
அது ஏன்? காரணம் சக மனிதனா நாம
எல்லரையும் நேசிக்கின்றோம்...சென்ட்டிமென்ட்டுகளால் நிறைந்தது இந்த உலகம் .. இதில் யாரும் விதிவிலக்கில்லை...
யார்
வூட்டு எழவோ பாய போட்டு அழுவோ
என்றில்லாமல் சக மனிதர்களை நேசிக்க கற்றுக்கொடுக்கின்றது இந்த படம்...
எதிர்பாராத
நிலையில் நடக்கும் இயற்கை சீற்றத்தின் போது மக்கள் எப்படி இருக்க வேண்டும்
என்று உணர்ச்சிகரமாய் பாடம் எடுக்கின்றது இந்த இம்பாசிபில் என்கின்ற
ஸ்பேனிஷ் நாட்டு திரைப்படம்.
===============
The Impossible -2012 படத்தின் ஒன்லைன் என்ன?
சுனாமியில் சிக்கிய
ஒரு குடும்பத்தின் உண்மைகதை.
=========
The Impossible -2012 படத்தின் கதை என்ன?
மருத்துவர் மரியா (Naomi Watts) தனது கணவன்ஹென்றி
பென்னட் (Ewan McGregor) மற்றும் மூன்று
ஆண்பிள்ளைகளோடு கிருஸ்மஸ் விடுமுறைக்கு தாய்லாந்து
வருகின்றார்கள்...2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்ப்பட்ட சுனாமி அவர்தகளின்
விடுமுறை கனவையும்,இந்த குடும்பத்தை சின்னாபின்னமாக்குகின்றது. அவர்கள் என்னவானார்கள் என்பதே படத்தின் கதை.
================
தமிழ்நாட்டில்
சுனாமி
ஏற்ப்படுத்திய தாக்கம் கொஞ்சம்
நஞ்சமல்ல.... அது எல்லோருக்கும் தெரியும்... ஆனால் நம்மவர்கள் அதன் பின்
இருக்கும் சோதனை வேதனை கதைகளை யாரும் காட்சிபடுத்தவில்லை.. ஆனால் கமல்
அந்த
சுனாமியை தன் தசாவதாரம் திரைப்பட கிளைமாக்ஸ்
காட்சிக்கு பயண்படுத்தி இருப்பார்...வேறு யாரும் தமிழ்சினிமாவில்
பயண்படுத்தியதாக
நினைவில்லை.. அட பிளாஷ் பேக்குல கூட சுனாமி
நடந்த அன்னைக்கு காலைல எட்டு மணிக்கு மெரினாவுக்கு என் காதலியை
வரச்சொல்லி காதலை சொல்லறதுக்குள்ள என்
காதலி கடல்ல போயிட்டான்னு எந்த ஹீரோவும் சோகமா டெபனிஷன்
கொடுக்கலை..
உண்மை சம்பவம் இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகின்றது என்று ரொம்பநாள் பார்க்காமல்
இந்த படத்தின் டிவிடியை வைத்து இருந்தேன்.. படத்தை பார்த்து கண் கலங்கி பிரம்மை
பிடித்து உட்கார்ந்து இருந்தேன்...
சுனாமி தாய்லாந்து கடற்கரை ஹோட்டல்களை
தரைமட்டமாக்குவதை மிக தத்ரூபமாக எடுத்து இருக்கின்றார்கள்...
சனாமிக்கு பிறகு அது ஏற்ப்படுத்திய அழிவு எப்படி இருக்கும் என்பதை டீடெயில்லாக சொல்லி இருக்கின்றார்கள்..
சுனாமி வந்த சமயம் இலங்கையில் ஒரு சாலை சத்திப்பில் பேருந்து உயரத்துக்கு கடல் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது...மூன்று
பெண்கள் ஒரு கட்டிடத்தில் நீட்டிக்கொண்டு
இருந்த கம்பை பிடித்துக்கொண்டு இருந்தார்கள்…
வேறு ஒரு பெண் அவர்களை வந்த பிடிக்க பிடி நழுவி தண்ணீரில் அடித்து
சென்ற காட்சி காலத்துக்கும் மறக்காது…
எல்லா
சுனாமியையும் அடித்த சாப்பிட்டது… இந்த நுற்றாண்டில்
ஜப்பானில் ஏற்ப்பட்ட சுனாமிதான்… கார் ,பஸ், மினி கப்பல், பிளைட் என்று கபளிகரம் செய்த
காட்சியை மறக்க முடியுமா?
சுனாமி தண்ணி ஏறிச்சின்னா மிதக்க வேண்டியதுதான்…
என்று நினைக்காதீர்கள் அது எப்படி சுழற்றி
அடிக்கும் நகரத்தில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு தண்ணீரில் மிதப்ப்பவர்களை அது எப்படி தாக்கும் என்பதை
முதல் காட்சியில் மரியா படும அவஸ்தையில் சொல்லி இருப்பார்கள்…
மரியா (Naomi Watts) சான்சே இல்லாத நடிப்பு…
ஒரு அம்மாவா தன்புள்ளைக்கு என்ன கத்து தரனும்ன்னு எப்படி தைரியபடுத்தனும்ன்னு சொல்லி
கொடுக்கும் இடங்கள் அருமை.
சுயநலமாக இருக்கும் பெரிய பையன் லுகாஸ் எப்படி
அவனுள் மனிதநேயம் எப்படி ஏற்ப்படுகின்றது.. அதை எப்படி அவன் அம்மா வளர்ந்து விடகின்றாள் என்பதையும்… அம்மாவுக்கு உதவி
செய்தது போக ஒரு தகப்பனையும் பிள்ளையும் தேடி சேர்த்து வைத்த அந்த பெரிய பையன் லுகாசின் நேசம் ..
சான்சே இல்லை.
கால் மெல்ல மெல்ல தன் தாயக்கு அழுகும் அந்த காட்சியும்,
தம்பி அப் என்னவானார்கள் என்ற பரிதவிப்பும்.. அற்புதம்… வேனில் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாக
உறவுகளை தேடி அலையும் அந்த காட்சிகள் காலத்த்துக்கு நம் நினைவில் இருக்கும்….




No comments:
Post a Comment