NEWS

Saturday, May 5, 2012

நானும் எனது கவிதைகளும்...

பிரிவின் வலி.... 

முரன்பாடுகளின் காரணத்தினால்
பிளவு பட்ட நம் நட்பு பிரிவுகளைக்
கொடுத்திருந்தாலும்...
அசந்தர்ப்பமாக உன்னை நினைக்கும் போது
இதயத்தில் ஏற்படும் வலியை
மறைக்கமுடியவில்லை...

செல்பேசியை நோண்டிக் கொண்டிருக்கும்
வேளையில் உன் பெயரைக் கண்ட
கணப்பொழுதில் பெருமூச்சுகள்...
நாம் உரையாடிய பொழுதை
நினைவு படுத்துகின்றன...

விலங்குகளால் என் கரம்
கட்டியிருந்தாலும்
தினம் ஒருமுறை
உன் வீடு தாண்டும் பொழுது
உன்னைத் தேடும் கண்களைக்
கட்டுபடுத்த முடிவதில்லை...

1 comment:

Anonymous said...

"தினம் ஒருமுறை
உன் வீடு தாண்டும் பொழுது
உன்னைத் தேடும் கண்களைக்
கட்டுபடுத்த முடிவதில்லை..."

நானும் தேடுகிறேன் என் நண்பனை,,,,,,,,,,,,,