இதோ இன்னொரு மரணம். ஆசிட் வீச்சினால் மரணமடைந்த பெண்களின் லிஸ்டில் விநோதினிக்கு பிறகு வித்யா. இருவரின் பிரச்சனையும் ஒரு தலை காதல் தான். விநோதினியின் பிரச்சனையில் ஒரு தலை காதல் என்றால் வித்யாவின் பிரச்சனை திருமணம் செய்ய மறுப்பு. இதுவும் ஒரு வகை காதல்தான். தான் விரும்பிய பெண்ணை அடைய முடியவில்லை என்றால் அவள் வாழக்கூடாது என்ற வெறி. பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது. பெண் ஒழுங்காக இருந்தாலும், அவளின் மீது ஒரு தலை காதல் வயப்பட்டவன் அவள் கிடைக்கவில்லையே என்ற வெறியில் ஆசிட் ஊற்றாமல் இருக்க வேண்டுமே என்று பயந்து நடுக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும் போல. ஆசிட் வீசியதால் சம்பந்தப்பட்ட ஆணின் வாழ்க்கையும் பாழாகிப் போகப் போகிறது. அதைப் பற்றி எதையும் யோசிக்காத அளவிற்கு காதல், வெறி வரக் காரணம் என்ன? நம் சமூதாயம் என்று தான் சொல்ல வேண்டும். சமூதாயத்தை நம்ம ஒருத்தரால மாத்திர முடியுமா? என்று கேட்பவர்களுக்கு நாம் தான் சமுதாயம். நாம் மாறினால் நிச்சயம் சமுதாயம் மாறும். எனவே உடன் பழகும் பெண்களுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கிறது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பழக நம் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம். பெரும்பாலான ஆணாதிக்க சிந்தனை வீட்டு பெண்களிடமிருந்துதான் ஆரம்பமாகிறது. இதைச் சொல்லும் போது என்னை திட்டத் தோன்றினாலும், நிஜம் அதுதான். ஆணாதிக்க சிந்தனையுள்ள ஒருவனின் வீட்டில் இருக்கும் பெண்ணினால் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?. முடியும் தன் மீது செலுத்தும் ஆதிக்க எண்ணத்தை தன் பிள்ளைகளுக்கு கடத்தாமல் இருந்தால் நிச்சயம் முடியும். ஒரு பெண் நினைத்தால் நிச்சயம் முடியும். என்ன தான் ஆணாதிக்கம் அது இது என்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை ஆண்கள் ஒர் அட்டகத்தி.அல்லது ஆரண்யகாண்டம் படத்துல அந்த ஹீரோஇன் சொல்லுற மாதிரி "சப்பையும் ஆம்பளதான் எல்லா ஆம்புளைங்களும் சப்ப தான்... " வாட் எ ரியாலிட்டி....

No comments:
Post a Comment