NEWS

Tuesday, March 5, 2013

மழை பல்வேறு நினைவுகளை  தூண்டுகிறது...பிரிந்த காதல்,நண்பன்,குடி,குடும்ப நிகழ்வு...எதையேனும் தூண்டுகிறது....

இன்று உன்னோடு மழை காலங்களில் நிகழ்ந்த சஞ்சரிபுகளை இந்த மழை என்னுள் வளம் வர செய்கிறது...உனக்காக இந்த கவிதை    காதலி....
 

பனித்தூறலாய்ப் பொழியும்
மழை நாட்களில்…
விடுமுறை
என அறிந்திருந்தும்
நனையும் விருப்பத்துக்காய்
கல்லூரி சென்ற நாட்கள்…

குடை
கொண்டு செல்லாத
வருத்தம் சிறிதும் இன்றி
நீரில் நடை போட்ட
நாட்கள்…

புத்தக தாள்கள்
கப்பல்களாய்
மழை நீரில்
மிதந்த நாட்கள்…

இந்நினைவுகளுள்
உன் நினைவும்
இன்று,
ஜன்னல் கம்பிகளில்
கொட்டி கொண்டிருக்கும்
நீர்த்திவலைகளைப் பார்த்தபடி
தேநீர் பருகும் போது
எழத்தான் செய்கிறது!
நீ ஒருவேளை
ஜன்னலை மூடி வைத்திருக்க கூடும்
நினைவுகளை மட்டும்
கரைய விட்டு…

No comments: